×

சத்தமாக பேச வேண்டாம் என்று கூறிய ஏர் இந்தியா விமான அதிகாரி மீது தாக்குதல்: அடாவடி பயணி மீது வழக்கு

புதுடெல்லி: விமானத்தில் சத்தமாக பேச வேண்டாம் என்று கூறிய ஏர் இந்திய விமான அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பயணியை டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் வணிக வகுப்பில் பயணம் செய்த ஏர் இந்தியா அதிகாரியின் இருக்கை மோசமாக இருந்ததால், அவர் எகானமி வகுப்பிற்கு மாற்றப்பட்டார். அப்போது எகானமி வகுப்பில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், யாரிடமோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த ஏர் இந்தியா அதிகாரி, அந்த நபரிடம் ‘சத்தமாக பேச வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார்.

அவரது கூற்றை ஏற்க மறுத்த பயணி, அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விமான ஊழியர்கள் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தனர். இதுகுறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 9ம் தேதி சிட்னியில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணி ஒருவர், ஏர் இந்தியா விமான அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டார். பலமுறை எச்சரித்தும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏர் இந்தியா ஊழியர் உட்பட பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மேற்கண்ட விமானம் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கிய பிறகு, அந்த நபரை போலீசில் ஒப்படைத்தோம். அவர்கள் அந்த நபர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

The post சத்தமாக பேச வேண்டாம் என்று கூறிய ஏர் இந்தியா விமான அதிகாரி மீது தாக்குதல்: அடாவடி பயணி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Air India ,New Delhi ,
× RELATED ஒரே நேரத்தில் 200 ஊழியர்கள் விடுப்பு ஏர்...